வடகொரிய அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்கர் ஒருவருக்கு 6 வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணியாக வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கரான மத்யூ மில்லர் அவர்கள் மீது 5 மாதங்கள் விசாரணை நடந்தது.
அவர் தனது விசாவை கிழித்ததாக, கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அவருக்கு எதிரான வழக்கு குறித்தோ அல்லது குறிப்பான குற்றச்சாட்டு குறித்தோ அரச செய்தி நிறுவனம் மிகக் குறைவான விபரங்களையே வெளியிட்டது.
மில்லர் அவர்களையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இன்னும் இருவரையும், வடகொரியா தனது இராஜதந்திர விளையாட்டின் காய்களாக நகர்த்துவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.