போர்ட் கிள்ளான்:
நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26, 2026 வரை தொடரும் வடகிழக்கு பருவமழைக்கு (MTL) முன்னதாக, நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 3,683 வெள்ள அபாய இடங்களுக்கு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை முழு எச்சரிக்கையுடன் உள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (JPS) தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், நாடு முழுவதும், குறிப்பாக வழக்கமான வெள்ள அபாய மாநிலங்களான பஹாங் (760), கிளந்தான் (618) மற்றும் திரெங்கானு (460) ஆகியவற்றில் இந்த அபாய இடங்கள் உள்ளன என்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ நோர் ஹிஷாம் முகமட் கூறினார்.
கிழக்கு கடற்கரை மாநிலங்களைத் தவிர, அதிக எண்ணிக்கையிலான வெள்ள அபாய இடங்களைக் கொண்ட பிற பகுதிகளில் சபா (517), ஜோகூர் (343), பேராக் (280) மற்றும் நெகிரி செம்பிலான் (123) ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.




