மேகாலயா முதல்வர் கொன்ராட் கே சங்மா வழிநடத்தும் என்பிபி, அருணாசலில் இரு இடங்களுக்கும் போட்டியிடாமல் பாஜகவை ஆதரிக்க முடிவு செய்ததும், பாஜகவும் மேகாலயத்தில் தேர்தல் போட்டியிலிருந்து விலகி என்பிபியை ஆதரிக்க முடிவு செய்தது. அந்த மாநிலத்தில் பாஜக என்பிபியை ஆதரிக்கிறது.
மணிப்பூரில் உள்ள புறநகர் மணிப்பூர் தொகுதிகளுக்கு பாஜக போட்டியிடாமல், என்.பி.எஃப்-ஐ ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அதேபோல், நாகாலாந்தில் ஒரே ஒரு இடத்தில் என்.டி.பி.பி. போட்டியிடும் நிலையில் பாஜக அங்கு போட்டியிடாமல் விலகியுள்ளது.
வடகிழக்கு பகுதியில் பாஜகவின் முகமாக திகழும் அஸ்ஸாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, அருணாசலில் பாஜகவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருக்கும் என்.பி.பி-யை பாராட்டினார்.
“எங்கள் கூட்டணிக்கு இடையே உள்ள இந்த இணையற்ற அர்ப்பணிப்பால், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றியை உறுதி செய்யும்” என்று சர்மா கூறினார். பல தொகுதிகளில் பாஜகவுடனான நேரடிப் போட்டி பெரும்பாலும் காங்கிரஸுடன் இருக்கும், சில தொகுதிகளில்தான் மற்ற கட்சிகள் போட்டியாக உள்ளன.
ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில், முதல் கட்டமாக 15 இடங்களில் அஸ்ஸாமில் 5 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயம் மற்றும் அருணாசலில் தலா இரண்டு இடங்களுக்கும் நாகாலாந்து, சிக்கிம், மிசோரம் மற்றும் திரிபுராவில் தலா ஒரு இடங்களுக்கும் என 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி மணிப்பூர் மற்றும் திரிபுராவில் மட்டுமே ஒருமித்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
காங்கிரஸ் மணிப்பூர் நகரப்பகுதி மற்றும் புறநகர் மணிப்பூர் ஆகிய இரு இடங்களிலும், திரிபுராவில் (திரிபுரா மேற்கு) ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது. மற்றொரு தொகுதியில் (திரிபுரா கிழக்கு) சிபிஎம் போட்டியிடுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பகுதியை ஆட்சி செய்த காங்கிரஸ், அஸ்ஸாமின் நாகோன் மற்றும் மேகாலயத்தின் ஷில்லாங் ஆகிய இரண்டு இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது.
ஜோர்ஹட் மற்றும் துப்ரி (இரண்டு அஸ்ஸாம்) மற்றும் உள் மணிப்பூர் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெரும் நம்பிக்கையுடன் உள்ளது.