• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வங்கி வேலையை விட்ட தந்தை..! மன அழுத்தம்..! சாதித்து காட்டிய ஆயுஷ் மாத்ரேவின் கதை

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
வங்கி வேலையை விட்ட தந்தை..! மன அழுத்தம்..! சாதித்து காட்டிய ஆயுஷ் மாத்ரேவின் கதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதிரடியான பேட்டர்கள் இல்லை, கடைசி ஓவர்களில் அதிக ரன்கள் இல்லை போன்ற காரணங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

மேலும் ருதுராஜ் கெய்க்வாட் திடீரென காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக சென்னை அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார் ஆயுஷ் மாத்ரே. மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியின்போது, 15 பந்துகளில் 32 ரன்களை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் 17 வயதேயான ஆயுஷ் மாத்ரே.

ரோகித் சர்மா, ஷர்தூல் தாகூர் ஆகியோருக்கு சிறுவயதில் பயிற்சியாளராக இருந்த தினேஷ் லாட் தான் ஆயுஷ் மாத்ரேவுக்கும் பயிற்சியாளர். 15 வயதில் ரோகித் சர்மா எவ்வளவு அதிரடியுடன் விளையாடினாரோ, அதே போல ஆயுஷ் மாத்ரே விளையாடுவதாக தினேஷ் லாட் கூறுகிறார்.

மேலும் ஆயுஷ் மாத்ரே பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்த அவர், “ஆயுஷ் மாத்ரே 10 வயதாக இருக்கும்போது நான் அவரை சந்தித்தேன். அவரிடம் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதுதான் அவரின் வளர்ச்சிக்கு காரணம்” என தெரிவித்தார்.

மேலும் அவரின் மற்றொரு பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டி கூறும்போது, ஆயுஷ் பல தடைகளை கடந்து வந்திருப்பதாக தெரிவித்தார். “உடற்தகுதி குறித்து அவர் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார். அவருக்காக அவரின் தந்தை யோகேஷ் மாத்ரே தனது வங்கி வேலையை விட்டு மகனின் பயிற்சிக்காக அவருடன் இருந்தார்.

மும்பை நகரின் வெளியில் இருந்தாலும், அவர் அப்போதிலிருந்தே சரியான நேரத்தில் பயிற்சிக்கு வந்து விடுவார். 10 மணிநேரம் மும்பை வெயிலில் அந்த கிட் பேக்கை எடுத்து வந்து பயிற்சி செய்து செல்வது எல்லாம் சுலபம் கிடையாது.

இந்திய அணியின் U-19 அணியின் விளையாட வேண்டும் என்பது அவரின் ஆசை. ஆனால் கடந்த ஆண்டில் உள்ளூர் போட்டிகளில் அவர் சரியாக விளையாடாததால் அவரின் அந்த கனவு நிறைவேறவில்லை. அதனால் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளானார். இதையடுத்து வினோ மாண்ட் கோப்பை, கேஏசிஏ, இராணி கோப்பை, ரஞ்சி கோப்பை, U-19, விஜய் ஹசாரே, ஐபிஎல் என 17 வயதில் பலவிதமான தொடர்களை விளையாடி வியப்பூட்டினார். அதற்கு அவரின் மன உறுதியும், திறமையும் மட்டுமே காரணம்.

மேலும் அவர் உணவு உண்ணும் முறையை முழுவதுமாக மாற்ற வேண்டும் என்று கூறினேன். 2019-20யில் அவர் இருந்ததற்கும், அவர் இப்போது இருப்பதற்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன” என்று தெரிவித்தார். கடந்த விஜய் ஹசாரே கோப்பையின்போது ஆயுஷ் மாத்ரே விளையாடிய 7 போட்டிகளில் 1 சதமும் 2 அரைசதமும் விளாசியது குறிப்பிடத்தக்கது.

First Published :

April 26, 2025 10:16 PM IST

Read More

Previous Post

ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி

Next Post

FD vs மியூச்சுவல் ஃபண்ட் vs ETF..! நீண்ட கால சேமிப்பிற்கு எது பெஸ்ட்?

Next Post
FD vs மியூச்சுவல் ஃபண்ட் vs ETF..! நீண்ட கால சேமிப்பிற்கு எது பெஸ்ட்?

FD vs மியூச்சுவல் ஃபண்ட் vs ETF..! நீண்ட கால சேமிப்பிற்கு எது பெஸ்ட்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin