Last Updated:
Nehal Modi Arrest | நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைதானார்.
பொருளாதார குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில் 2019ம் ஆண்டு அவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரத்தில் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடிக்கு முக்கிய பங்கு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முக்கிய ஆதாரங்களை அழித்தது, சாட்சி சொல்ல முன்வந்தவர்களை மிரட்டியது, விசாரணைக்கு இடையூறாக இருந்தது என நேஹல் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மோசடி பணத்தை வெளிநாட்டில் மாற்றியதாகவும் நேஹல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவரை கைது செய்ய இன்டர்போலின் உதவியை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நாடி இருந்தன.
July 05, 2025 7:29 PM IST