ஊழியர்கள் வருங்கால அமைச்சகம், சில முக்கிய தேவைகளுக்காக யூசர்கள் வேலையை சுலபமாக்கும் புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில தகுதியான சூழ்நிலைகளில் சரிபார்க்கப்பட்ட பேங்க் பாஸ்புக் அல்லது செக் லீஃப்பில் புகைபடத்தை பதிவேற்றுவது தொடர்பான விதிகளை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் வங்கிக்கான KYC சரிபார்ப்பு:
வங்கி அல்லது நேஷனல் பெமென்ட்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா (NPCI)வில் உங்கள் KYC விவரங்களை நேரடியாகச் சரிபார்க்கவும்.
DSC மூலம் உங்கள் நிறுவனம் அல்லது முதலாளியின் விவரங்கள்:
டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழை (DSC) பயன்படுத்தி உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உங்கள் முதலாளி சரிபார்க்க முடியும்.
ஆதார் எண் சரிபார்த்தல் UIDAI ஆல் சரிபார்க்கப்படும்:
உங்கள் வங்கிக் கணக்கின் ஆதார் எண் UIDAI ஆல் சரிபார்க்கப்படும்.
யுஐடிஏஐ (UIDAI) அனுமதியுடன் ஆதார் எண் சரிபார்ப்பு செய்யப்பட இருக்கிறது.
இது ஆன்லைன் க்ளெய்ம் செட்டில்மென்ட் ப்ராசஸ்ஸை விரைவுபடுத்தவும், சான்றளிக்கப்பட்ட பேங்க் பாஸ்புக் அல்லது செக் லீஃப்பில் புகைப்படம் இல்லாமல் ஆன்லைன் க்ளைம் சமர்ப்பிக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கைகளைக் குறைக்கவும் உதவுகிறது.
சரிபார்க்கப்பட்ட வங்கி விவரங்கள்:
உங்கள் வங்கி விவரங்கள் ஏற்கனவே KYC அல்லது மற்றொரு முறை மூலம் சரிபார்க்கப்பட்டிருந்தால், நீங்கள் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
கிளைம் தொகை:
கொடுக்கப்பட்ட வரம்புத் தொகைக்குக் கீழே வரும் கிளைம்களுக்கு தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் வங்கிக் கணக்கில் செக் புக் செயல்பாடு இல்லாவிட்டால், EPFO மற்றொரு வழியையும் உங்களுக்கு கூறியுள்ளது. அதன்படி உங்கள் வங்கிக் பாஸ்புக்கின் முதல் பக்கத்தின் காப்பியை(copy), முறையாக அங்கீகரிக்கப்பட்ட (வங்கி மேலாளரால் முத்திரையிடப்பட்டு கையொப்பமிடப்பட்டது) அனுப்பப்படலாம். இந்த அங்கீகரிக்கப்பட்ட பாஸ்புக் காப்பியில், உங்கள் வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு சமர்பித்தால் போதும்.
ஆன்லைனில் ஈபிஃஎப் கிளைம் செய்வது எப்படி?
இந்த புதிய விதிகள் என்றாலும் வழக்கமான ஈபிஃஎப் கிளைம் முறை மாற்றப்படவில்லை.
1. மெம்பெர் போர்ட்டல் வெப்சைட்டுக்கு சென்று உங்களது யுஏஎன் நம்பர் (UAN Number) மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.
2. கிளைம் பேஜிற்கு செல்ல வேண்டும். இப்போது, உங்களது கிளைம் டைப், எவ்வளவு பணம் எடுக்கப்போகிறீர்கள் மற்றும் பேங்க் அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும்.
3. தொடர்புடைய விவரங்களை தேர்வு செய்யவும். அதை கொடுத்த பிறகு வழக்கம் போல ஆவணங்கள் பதிவேற்றத்தில் பேங்க் பாஸ்புக் அல்லது செக் லீஃப் கேட்கப்படும்.
Also Read |
குடும்பத்திற்கு ஒரே மகளா? மத்திய அரசின் மாதம் ரூ.35,000 வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா? தகுதி என்ன?
4. இறுதியாக உங்களது கிளைமை சமர்பித்து முடிக்க, UIDAI இல் பதிவுசெய்யப்பட்ட செல் எண்ணுக்கு பெறப்பட்ட OTP மூலம் அங்கீகரிக்கவும்.
தகுதிகள்:
– உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மெம்பெர் ஸ்டேட்டஸ் மற்றும் செல்லுபடியாகும் யுனிவர்சல் அக்கௌன்ட் நம்பர் (UAN) இருக்க வேண்டும்.
– உங்கள் UAN கணக்கில், உங்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் பிற KYC தகவல்கள் இணைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
