வங்கி கணக்குகளுக்கு நாமினியை நியமிப்பதால் கிடைக்கும் பல்வேறு பலன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொருளாதார திட்டமிடலை பொருத்தவரை உங்களுடைய சொத்துக்களையும் பணத்தையும் பாதுகாப்பதோடு, உங்களுக்குப் பிறகு அது யாரை சென்றடைய வேண்டும் என்பதை தீர்மானமாக உறுதி செய்து வைப்பதும் அவசியமாக கருதப்படுகிறது.
இதனை அடைவதற்கான ஒரு அற்புதமான வழி உங்களுடைய பேங்க் அக்கவுண்டிற்கு ஒரு நாமினியை சேர்ப்பது. இந்த எளிமையான ஆனால் அதே நேரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் செய்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக தடை இல்லாத டிரான்ஸ்ஃபர் மற்றும் அக்கவுண்ட் ஹோல்டர் துரதிஷ்டவசமாக இறந்து போகும் பட்சத்தில் அவருடைய சொத்துக்களை பாதுகாப்பதற்கு இது உதவுகிறது. இப்போது உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு நாமினியை சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மிக குறைந்த சட்ட ரீதியான சிக்கல்கள்
வாரிசுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய சட்ட ரீதியான தகராறுகளை தவிர்ப்பதற்கு இந்த நாமினி செயல்முறை உதவுகிறது. உங்களுடைய சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து விடுவதால் இதனால் குடும்பத்திற்குள் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
உங்களை சார்ந்து இருப்பவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு
உங்களை சார்ந்து இருக்கக்கூடிய நபர்களை நீங்கள் முறையாக நாமினியாக தேர்ந்தெடுத்து விட்டால், நீங்கள் இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கான பொருளாதார உதவி சரியான நேரத்தில் கிடைத்துவிடும். அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து போகும் சமயத்தில் உடனடி பொருளாதார தேவைகள் ஏற்படும் பொழுது இது உதவியாக இருக்கும்.
மன தெளிவு மற்றும் அமைதி
தனக்கு பிறகு தன்னுடைய சொத்துக்கள் இவர் இவருக்கு சென்றடைய வேண்டும் என்பதை அக்கவுண்ட் ஹோல்டர் முன்கூட்டியே தீர்மானித்து விடுவதால் அவருக்கு ஒரு மன தெளிவு கிடைக்கிறது. இதனால் அவர் மன நிம்மதியோடு தன்னுடைய ஆசை நிறைவேறும் என்ற சந்தோஷத்தோடு பயமின்றி இருக்கலாம்.
செலவுகள்
ஒருவேளை நீங்கள் நாமினியை தேர்ந்தெடுக்காவிட்டால் வாரிசு சான்றிதழை சட்ட ரீதியாக பெறுவதற்கு பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். அதற்கான கட்டணங்கள் மற்றும் தொடர்புடைய செலவுகளை நாமினியை அமைப்பதன் மூலமாக நீங்கள் தவிர்க்கலாம்.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
எளிமையான செயல்முறை
நாமினி ஒரு சொத்துக்கான கிளைம் செய்வது என்பது மிக எளிமையான செயல்முறை மற்றும் அதற்கு குறைந்த ஆவணங்களே தேவைப்படுகிறது. நாமினிகள் சொத்துக்களை கிளைம் செய்வதற்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழக்கமாக ஒழுங்கமைக்கப்பட்ட செயல்முறைகளை அமைத்துள்ளனர்.
நெகிழ்வுத்தன்மை
அக்கவுண்ட் ஹோல்டர் எப்போது வேண்டுமானாலும் நாமினியை தேவைக்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்ளலாம். தனிப்பட்ட சூழ்நிலையின் அடிப்படையில் மாற்றங்களை செய்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. ஆகவே இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு உடனடியாக உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு நாமினியை நியமித்து வீண் பிரச்சனைகளை தவிர்த்து விடுங்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
