• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்கவில்லை என்றால் இதுதான் நடக்கும்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்கவில்லை என்றால் இதுதான் நடக்கும்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பேலன்ஸ், வங்கி நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை விடக் குறைவாக இருந்தால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட வங்கி சேவைகளுக்கான அணுகலையே இழக்க நேரிடும். கூடுதலாக, சில கடன் வழங்குநர்கள் உங்கள் கணக்கை தற்காலிகமாக முடக்கவோ அல்லது செயலற்றதாகவோ குறிக்கக்கூடும்.

ஐசிஐசிஐ வங்கியின் சமீபத்திய மாற்றம்

ஆகஸ்ட் 1 முதல் புதிதாக திறக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு, ஐசிஐசிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையின் தேவையை மாற்றுவதாக அறிவித்தது. ஆரம்பத்தில், நகர்ப்புற மற்றும் பெருநகர கிளைகளுக்கு குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை ரூ.50,000 ஆக உயர்த்தி இருந்தாலும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அதை ரூ.15,000 ஆகக் குறைத்தது. இந்த முடிவு, மினிமம் பேலன்ஸை பராமரிப்பது குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. உண்மையில், சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்குமே இது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.

மினிமம் பேலன்ஸ் ஏன் முக்கியம்?

வங்கிகள், சேவைகளை சீராக வழங்கவும், செயல்பாட்டுச் செலவுகளை சமன்படுத்தவும் வங்கிகள் இந்த மினிமம் பேலன்ஸ் விதிமுறைகளை அமல்படுத்துகின்றன. அதன்படி,

சேமிப்புக் கணக்குகள் – பொதுவாக, குறைந்தபட்ச இருப்புத் தேவைகள் குறைவாக இருக்கும்.

நடப்புக் கணக்குகள் – அதிக பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், குறைந்தபட்ச இருப்புத் தேவைகள் அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

இருப்பு குறைந்தால் ஏற்படும் விளைவுகள்

அபராதம்: சராசரி இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களிடம், வங்கிகள் ஒரு நிலையான தொகையையோ அல்லது மினிமம் பேலன்ஸ் பற்றாக்குறையின் குறிப்பிட்ட சதவீதத்தையோ வசூலிக்கலாம். அதைத் தொடர்ந்தும், மினிமம் பேலன்ஸ் குறைவாகவே இருந்தால் அபராதம் அதிகரித்து சேமிப்பையே பாதிக்கலாம்.

வசதி இழப்பு: மினிமம் பேலன்ஸ் பராமரிக்கப்படாத போது, இலவச காசோலைப் புத்தகம், டிமாண்ட் டிராஃப்ட், டெபிட் கார்டு போன்ற வசதிகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.

கணக்கு முடக்கம்: நீண்ட காலமாக இருப்பு குறைவாகவே இருந்தால், கணக்கு செயலற்றதாக மாற்றப்பட்டு, கூடுதல் சரிபார்ப்புக்குப் பின்னர் மட்டுமே மீண்டும் இயக்கப்படலாம்.

அபராதங்களைத் தவிர்க்கும் வழிகள்

  • சேமிப்புக் கணக்கை அடிக்கடி கண்காணித்தல் – மொபைல் ஆப், எஸ்எம்எஸ் மூலமாக அவ்வப்போது வங்கிக் கணக்கு இருப்பை சரிபார்ப்பது நல்லது.
  • தானியங்கி பரிமாற்றம் அமைக்கவும் – தேவையான இருப்பைத் தொடர்ந்து பராமரிக்க, மற்றொரு கணக்கிலிருந்து ஆட்டோ டிரான்ஸ்பர் விருப்பத்தை அமைத்துக் கொள்ளலாம்.
  • விதிமுறைகளை அறிந்திருங்கள் – நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியின் நிபந்தனைகள் மற்றும் குறைந்தபட்ச இருப்புத் தேவையைப் பற்றி அறிந்து கொள்வது தேவையில்லாத நிதி இழப்பை தவிர்க்க உதவும்.

மினிமம் பேலன்ஸ் ஒரு கட்டாய நிபந்தனை போலத் தோன்றினாலும், அது வங்கி சேவைகளை தடையில்லாமல் அனுபவிக்கவும், தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்கவும் உதவுகிறது. கணக்கை முறையாகக் கண்காணிப்பதும், தேவையான குறைந்தபட்ச தொகையை பராமரிப்பதுமே, உங்களது நிதியை பாதுகாப்பாகவும், சீராகவும் வைத்திருக்க உதவும் சிறந்த வழியாகும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 01, 2025 7:48 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்கவில்லை என்றால் இதுதான் நடக்கும்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Read More

Previous Post

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

Next Post

உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு வர புதினிடம் மோடி வலியுறுத்தல் | Conflict with Ukraine must end as soon as possible – Modi urges Putin

Next Post
உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு வர புதினிடம் மோடி வலியுறுத்தல் | Conflict with Ukraine must end as soon as possible – Modi urges Putin

உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு வர புதினிடம் மோடி வலியுறுத்தல் | Conflict with Ukraine must end as soon as possible - Modi urges Putin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin