• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் திடீர் அழைப்பு.. 2 நாள் கூட்டம் எதற்காக..? பெரிய மாற்றம் வருகிறதா? | Nirmala Sitharaman Calls Urgent 2-Day Bank Meeting: Big Changes Ahead to Save the Rupee?

GenevaTimes by GenevaTimes
August 11, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் திடீர் அழைப்பு.. 2 நாள் கூட்டம் எதற்காக..? பெரிய மாற்றம் வருகிறதா? | Nirmala Sitharaman Calls Urgent 2-Day Bank Meeting: Big Changes Ahead to Save the Rupee?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் திடீர் அழைப்பு.. 2 நாள் கூட்டம் எதற்காக..? பெரிய மாற்றம் வருகிறதா?

ஈரான் – அமெரிக்கா மத்தியிலான போர் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த சரிவை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிகளை கலந்து ஆலோசனை செய்ய 2 நாள் கூட்டத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதேபோல் இக்கூட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், அதிகப்படியாக இறக்குமதி செய்து வரும் காரணத்தாலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அளவீட்டை குறைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது.

வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் திடீர் அழைப்பு.. 2 நாள் கூட்டம் எதற்காக..? பெரிய மாற்றம் வருகிறதா?

மத்திய நிதியமைச்சகம் அழைப்பின் பெயரில் நடைபெறும் இக்கூட்டத்தை எஸ்பிஐ வங்கி தலைவர் சிஎஸ் ஷெட்டி தலைமையில் ஆகஸ்ட் 17-18 ஆகிய 2 நாட்களில் நடக்கிறது.

இக்கூட்டத்தின் முடிவில் வங்கிகள் பரிந்துரைத்த திட்டங்கள், தீர்வுகளை வங்கித்துறை மூத்த அதிகாரிகளை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இறுதி முடிவை ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலையில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகள் மட்டும் அல்லாமல் மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் நிதி அமைப்புகளும் கலந்துக்கொள்கிறது.

இக்கூட்டத்தில் டாலர் வைப்பு நிதிகளை பெறுவது மட்டுமல்லாமல் டாலர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஜிசிசி அலுவலகங்களை அமைப்பதில் துவங்கி உள்கட்டமைப்பு துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது வரையில் அனைத்து வழியிலும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சாத்திய கூர்களை ஆராய இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.26 ஆக உள்ளது, இதேவேளையில் கச்சா எண்ணெயில் ஒரு பேரலுக்கு 83 டாலராக உள்ளது. ஈரான் போருக்கு முன்பு ஒரு பேரல் 65 – 70 டாலராக இருந்து, இப்போது டாலர் மதிப்பு 90-92 ரூபாய் அளவிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஈரான் போர் உச்சக்கட்டதில் இருந்த போது ஒரு பேரல் 110 டாலருக்கு மேல் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு அதிகளவில் வெளிநாட்டு ஆதாரங்களை குறிப்பாக வளைகுடா ஆதாரங்களை அதிகம் நம்பியிரும் வேளையில் இப்போர் மூலம் பெரும் பாதிப்பை பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, ரூபாய் மதிப்பு, அன்னிய முதலீடுகள் வெளியேற்ற என பல வகையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை சரி செய்யவே மத்திய அரசு, சமீபத்தில் FCNR வைப்பு நிதி திட்டத்தை திருத்தி அதிக வட்டி வருமானம் கொடுக்கும் வகையில் அறிமுகம் செய்தது. இது பெரிய அளவில் பலன் கொடுத்த காரணத்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதியமைப்புகளின் கூட்டம் நடக்கிறது.

Share This Article

English summary

Nirmala Sitharaman Calls Urgent 2-Day Bank Meeting: Big Changes Ahead to Save the Rupee?

Nirmala Sitharaman Calls Urgent 2-Day Bank Meeting: Big Changes Ahead to Save the Rupee? — வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் திடீர் அழைப்பு.. 2 நாள் கூட்டம் எதற்காக..? பெரிய மாற்றம் வருகிறதா?

Story first published: Monday, August 10, 2026, 12:52 [IST]

Other articles published on Aug 10, 2026

Read More

Previous Post

இஸ்ரேல் – அமெரிக்கா தலையில் இடி.. மொஜ்தபா கமேனி நலமாக இருக்கிறார்.. வீடியோ வெளியிட்ட ஈரான் | Iran’s state media released video of suprme leader Mojtaba Khamenei

Next Post

பேராக் கடற்பகுதியில் ஊடுருவ முயன்ற 34 சட்டவிரோதக் குடியேறிகள் கைது: மலேசிய கடலோரக் காவல் படை அதிரடி! | Makkal Osai

Next Post
பேராக் கடற்பகுதியில் ஊடுருவ முயன்ற 34 சட்டவிரோதக் குடியேறிகள் கைது: மலேசிய கடலோரக் காவல் படை அதிரடி! | Makkal Osai

பேராக் கடற்பகுதியில் ஊடுருவ முயன்ற 34 சட்டவிரோதக் குடியேறிகள் கைது: மலேசிய கடலோரக் காவல் படை அதிரடி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin