Last Updated:
தற்போதைய நிலையில், பாகிஸ்தான் கடும் கடன் சுமையிலும் அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டிலும் சிக்கித் தவிக்கிறது.
வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தற்போதைய பொருளாதார நிலை, நாணய மதிப்பு மற்றும் இந்தியாவுடனான வர்த்தகம் குறித்த விபரங்கள் பார்க்கலாம்.
வங்க தேசம் 1971-ல் சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானை விட ஏழ்மையாக இருந்தது. ஆனால், இன்று வங்கதேசத்தின் பொருளாதாரம் பாகிஸ்தானை விடப் பெரியது மட்டுமல்லாமல், தனிநபர் வருமானத்திலும் பாகிஸ்தானை விட 50% அதிகமாக உள்ளது.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், பாகிஸ்தானை விட வங்கதேசம் மிகவும் வலிமையான நிலையில் உள்ளது. 2024-2025 நிதியாண்டின் புள்ளிவிவரங்களின்படி, வங்ளாதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 475 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், பாகிஸ்தானின் GDP சுமார் 397 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது
நாணய மதிப்பைப் பொறுத்தவரை, வங்கதேசத்தின் டாக்கா (Taka), பாகிஸ்தான் ரூபாயை விட இரண்டு மடங்குக்கும் மேல் அதிக மதிப்புடையது. உதாரணமாக, 10 வங்கதேசம் டாக்காவின் மதிப்பு சுமார் 7.36 இந்திய ரூபாய்க்கு சமம், ஆனால் 10 பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வெறும் 3.20 இந்திய ரூபாய் மட்டுமே.
மேலும், வங்ளாதேசத்தின் தனிநபர் வருமானம் ($2,730) பாகிஸ்தானை விட ($1,800) கணிசமாக உயர்ந்துள்ளது, இது அந்நாட்டின் வேகமான தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
வர்த்தக ரீதியாக இந்தியா, பாகிஸ்தானை விட வங்ளாதேசத்துடன்தான் பல மடங்கு அதிக பிசினஸ் செய்கிறது. 2024-25 நிதியாண்டில் இந்தியா மற்றும் வங்க தேசம் இடையேயான மொத்த வர்த்தகம் சுமார் 13.51 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக வங்ளாதேசத்தை மாற்றியுள்ளது.
வங்காளதேசம் vs பாகிஸ்தான்: பொருளாதார போரில் முந்துவது யார்? எந்த நாட்டின் கரன்சிக்கு மதிப்பு அதிகம்?


