• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வங்கதேச விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு – அரசு துக்கம் அனுசரிப்பு | Bangladesh plane crash Death toll rises to 27 Government mourns

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
வங்கதேச விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு – அரசு துக்கம் அனுசரிப்பு | Bangladesh plane crash Death toll rises to 27 Government mourns
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டாக்கா: வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

வங்கதேச தலைநகரான டாக்காவின் உட்டாரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நேற்று வங்கதேச போர் விமானம் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மதியம் 1:06 மணிக்கு எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 27 ஆக உயர்ந்துள்ளது, அவர்களில் 25 பேர் குழந்தைகள் என்று வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் சிறப்பு ஆலோசகர் சைதுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விபத்தில் சுமார் 170 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக இன்று அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்காக நாட்டின் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்படும். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வங்கதேச விமானப்படையால் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

ரூ.74 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை: கிராமுக்கு ரூ.105 உயர்வு | Gold price crosses Rs 74 thousand Increase by Rs 105 per gram

Next Post

“மக்களின் தேர்வு, மக்களின் விலை” என்ற கருப்பொருளுடன் மைடின் 2025 பிரச்சாரம் | Makkal Osai

Next Post
“மக்களின் தேர்வு, மக்களின் விலை” என்ற கருப்பொருளுடன் மைடின் 2025 பிரச்சாரம் | Makkal Osai

"மக்களின் தேர்வு, மக்களின் விலை" என்ற கருப்பொருளுடன் மைடின் 2025 பிரச்சாரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin