Last Updated:
மூன்று முறை வங்கதேசத்தின் பிரதமராக இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அவர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிடா ஜியா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பாதிப்பு மிக மோசமானதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
80 வயதாகும் கலிடா ஜியோவுக்கு நுரையீரல் தொற்று அறிகுறி ஏற்பட்டது. இதை அடுத்து நவம்பர் 23ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளிவந்த நிலையில், அவரது வங்கதேச தேசிய கட்சி (பி.என்.பி) கட்சித் தொண்டர்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
அத்துடன் அவருக்கு இதயம், கல்லீரல், சிறுநீரகப் பிரச்சனைகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே லண்டனில் இருக்கும் கலிடா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், வங்கதேசத்தில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக தன்னால் அங்கு வர முடியாது என தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்னர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வங்கதேச நாடாளுமன்ற தேர்தலுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
November 30, 2025 4:09 PM IST
வங்கதேச முன்னாள் பிரதமர் ஐசியூவில் அனுமதி.. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்…


