Last Updated:
வங்கதேசத்தில் அண்மைக் காலமாக இந்து இளைஞர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் பாதுகாப்பின்றி உணர்வதால் தேர்தலின்போது தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என இந்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு புரட்சி ஏற்பட்டு, ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அந்தப் புரட்சியின்போது, இந்து மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
வங்கதேசத்தில் அண்மைக் காலமாக இந்து இளைஞர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
அங்கு பிப்ரவரி 12-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்பு கோரி இந்து அமைப்புகள் முறையிட்டுள்ளன.
நாட்டின் மிகப் பெரிய இந்து அமைப்பான தாக்கேஸ்வரி இந்து சபாவினரும், கிறிஸ்தவ, புத்த ஒற்றுமைக் கவுன்சிலைச் சேர்ந்தவர்களும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து இந்து வாக்காளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை தெரிவித்தனர்.
இந்து மக்கள், தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்றால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்துக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிட்டகாங் நகரில் நேற்று 28 வயது இந்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இந்து அமைப்புகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.


