Last Updated:
வங்கதேசத்துடன் திரிபுரா 856 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அந்த மாநிலத்தின் 3 பகுதிகள் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் வங்கதேச எல்லை பகுதி அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட் ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் இந்த ஆளில்லா ட்ரோன் விமானத்தை திரிபுரா போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து ட்ரோன் எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது அந்த ட்ரோன் பரிசோதனைக்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ட்ரோனில் இருந்த கேமராக்கள் அதி நவீனமாக இருந்த்ம், நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக படம் பிடிக்கும் தன்மை கொண்டதாகவும் இருந்த்தாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைக்கு இந்த ட்ரோன் திரிபுரா போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அப்போது அதனை மாநில தடயவியல் மையத்திற்கு போலீசார் அனுப்பி பரிசோதித்துள்ளனர்.
முதல் கட்ட சோதனைக்கு பின்னர் ட்ரோன் எல்லை பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளியன்று துர்காபரி எல்லைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் 915 கிராம் எடைகொண்ட அந்த ட்ரோனை சிறுவன் ஒருவன் எடுத்துள்ளான்.
இந்த ட்ரோன் மிகத் துல்லியமாக வங்கதேச எல்லையில் இருந்து 650 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எப்படி இந்த ட்ரோன் இந்திய எல்லைக்குள் வந்த், அதில் என்ன பதிவாகியுள்ளது என்பது குறித்த விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
August 02, 2025 9:12 PM IST


