• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வங்கதேச அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்று ஐக்கிய அரபு அமீகரம் சாதனை | United Arab Emirates record T20 series win against Bangladesh

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
வங்கதேச அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்று ஐக்கிய அரபு அமீகரம் சாதனை | United Arab Emirates record T20 series win against Bangladesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷார்ஜா: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி தொடரை 2-1 என கைப்பற்றி சாதனை படைத்தது.

வங்கதேச அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு ஷார்ஜாவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 11 ஓவர்களில் 71 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் 18 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் சேர்த்த 40 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸமேனான ஜாகர் அலி 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் சேர்த்த 41 ரன்களுமே வங்கதேச அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. ஐக்கிய அரபு அமீகர அணி தரப்பில் ஹைதர் அலி 3 விக்கெட்களை வீழ்த்தினார். மத்தியுல்லா கான், சாகிர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அலிசான் ஷரஃபு 47 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், ஆசிப் கான் 26 பந்தகளில், 5 சிக்ஸர்களுடன் 41 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது.

முன்னதாக கேப்டன் முகமது வசீம் 9, முகமது ஷோகைப் 29, ராகுல் சோப்ரா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

முதல் போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது. வங்கதேச அணிக்கு டி20 தொடரை ஐக்கிய அரபு அமீரக அணி வெல்வது இதுவே முதன்முறையாகும்.



Read More

Previous Post

தயாசிறியின் நடத்தை தொடர்பில் விசாரணை : சபாநாயகர் அதிரடி நடவடிக்கை

Next Post

இந்தியா – ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைவதால் தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் அதிகரிக்கும்: தூதரக அதிகாரி உறுதி | Embassy official says Trade between Tamil Nadu and Germany will increase

Next Post
இந்தியா – ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைவதால் தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் அதிகரிக்கும்: தூதரக அதிகாரி உறுதி | Embassy official says Trade between Tamil Nadu and Germany will increase

இந்தியா - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் முடிவடைவதால் தமிழகம் - ஜெர்மனி இடையிலான வர்த்தகம் அதிகரிக்கும்: தூதரக அதிகாரி உறுதி | Embassy official says Trade between Tamil Nadu and Germany will increase

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin