Last Updated:
போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், தலைநகர் டாக்கா மற்றும் காசிபூர் உள்ளிட்ட முக்கிய தொழில்பேட்டை பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது.
வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
வங்கதேசத்தில் பொருளாதார முதுக்கெலும்பாக திகழும் ஆயத்த ஆடை தொழில், அந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் ஆடை உற்பத்தி துறையில் பணியாற்றும் சூழலில், பல ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதியம் 12,500 டாகாவாக, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9,800 ரூபாயாகவே இருக்கிறது.
#WATCH | Dhaka, Bangladesh: Bangladeshi garment workers launch massive violent protests over wages. Vandalism and clashes reported in Dhaka and Gazipur.
A heavy police force and Border Guard Bangladesh have been deployed to restore order in the industrial areas. https://t.co/Ga0zZ8fo5X— ANI (@ANI) November 1, 2026
இந்த சூழலில், கடுமையான விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, இந்த ஊதியத்தை 22,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென கோரி தொழிலாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், தலைநகர் டாக்கா மற்றும் காசிபூர் உள்ளிட்ட முக்கிய தொழில்பேட்டை பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது. சுமார் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை வெடித்ததால், அவற்றை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 3-ஆவது நாளாகத் தொடர்ந்த போராட்டத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை உற்பத்தி முற்றிலுமாக முடங்கியது.


