வங்கதேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வன்முறை வெடித்ததால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாணவர் அமைப்பினரும் கல்வீச்சு, தீவைப்பு போன்றவற்றை அரங்கேற்றியதால், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனிடையே, டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் அரண்மனைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார்.
இதன்மூலம் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தற்போது ராணுவம் இடைக்கால அரசை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, ராணுவ ஹெலிகாப்டரில் வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனா உடன் அவரது சகோதரியும் இந்தியாவுக்கு தப்பி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு புறம் ஷேக் ஹசீனாவும், அவரது சகோதரியும் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தது ஏன்?
- 1971ஆம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட நாடு இந்தியா. பாகிஸ்தானிடம் இருந்த கிழக்கு பாகிஸ்தான் பகுதியை பிரித்து தனி நாடாக உருவாக்கிக் கொடுத்தது முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான். எனவே, வங்கதேசத்திற்கும், இந்தியாவுக்கும் ஒரு ஆழமான நட்புறவு இருந்து வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த ஷேக் ஹசீனா, சுதந்திரப் போரில் இந்திய அரசும், ராணுவமும் தங்களுக்கு செய்த உதவிகளை நினைவுகூர்ந்தார். அத்துடன், இந்தியாவுடனான நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையையும் அவர் குறிப்பிட்டார்.
-
பல ஆண்டுகளாக ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஒரு முக்கிய ஆதரவு நாடாக இருந்து வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
-
வங்கதேசத்தில் கடந்த் 1996ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் வெற்றிபெற்ற ஷேக் ஹசீனா, இந்தியாவுடன் தொடர்ந்து நட்புறவை வளர்த்து வந்துள்ளார். டெல்லி – டாக்கா இடையிலான நெருங்கிய உறவுகளை பேணுவதற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்.
இதையும் படிங்க:
பிரதமர் தலைமறைவு… ராணுவ ஆட்சி… வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?
-
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா – வங்கதேசத்திற்கு இடையிலான நட்புறவு வலுப்பெற்றதில் ஷேக் ஹசீனாவின் பங்கு மிகவும் முக்கியமானது. அதேபோல், இந்தியாவும் வங்கதேசத்திற்கு பல வாய்ப்புகளை வரப்பிரசாதமாக கொடுத்துள்ளது. குறிப்பாக, ஆற்றல், நிதி மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதில் இந்தியா மூலம் பல நன்மைகளை வங்கதேசம் பெற்றுள்ளது.
-
வங்கதேசத்தில் நான்கின் ஒரு பங்கு நிதியை இந்தியா வழங்கியுள்ளது. மேலும், அந்நாட்டுக்கு இந்தியா பல்வேறு கடன்களை வழங்கி, தெற்காசியாவில் இந்தியாவும், வங்கதேசமும் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாக இருக்கின்றன.
- 2022-23ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே வங்கதேசட்த்ஹின் மிகப்பெரிய ஏற்றுமதி இடமாக இந்தியா இருந்து வருகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)