சட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
வங்கதேசத்தின் சட்டோகிராமில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் சண்டிமல் 59, தனஞ்செய டி சில்வா 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
கமிந்து மெண்டிஸ் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 531 ரன்களில் இலங்கையின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது.