• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அபாரம்: தொடரை கைப்பற்றியது இலங்கை அணி | sri lanka beats bangladesh in second test match won series in colombo

GenevaTimes by GenevaTimes
June 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அபாரம்: தொடரை கைப்பற்றியது இலங்கை அணி | sri lanka beats bangladesh in second test match won series in colombo
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு: வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும், தொடரை 1-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது.

இலங்கை – வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வந்தது. இதில் முதலில் விளையாடிய வங்கதேசம் 79.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 458 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இலங்கை முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை லிட்டன் தாஸ் 13 ரன்களுடனும், நயீம் ஹசன் ரன் எடுக்காமலும் தொடங்கினர்.

4-ம் நாள் ஆட்டத்திலும் இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி, வங்கதேச வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தனர். இதனால் 44.2 ஓவர்களில் 133 ரன்களுக்கு வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. லிட்டன் தாஸ் 14, நயீம் ஹசன் 5, தைஜுல் இஸ்லாம் 6, எபடோட் ஹொசைன் 6 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர்.

இதையடுத்து இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 2 போட்டிகள் டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்களையும், தனஞ்செய டி சில்வா, தரிந்து ரத்னாயகே ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அசிதா பெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். போட்டி நாயகனாகவும், தொடர்நாயகனாகவும் பதும் நிசங்கா தேர்வு செய்யப்பட்டார்.

ஒருநாள் தொடர்: டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. முதல் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் வரும் ஜூலை 2-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு இந்த 2 அணிகள் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை 10-ம் தேதி தொடங்கவுள்ளது.



Read More

Previous Post

’விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை’ விவசாயிகளுக்கு நீர்வளத்துறை வேண்டுகோள்!

Next Post

ஒபாமாவுடன் விவாகரத்தா? – மிச்செல் ஒபாமா மீண்டும் விளக்கம் | Makkal Osai

Next Post
ஒபாமாவுடன் விவாகரத்தா? – மிச்செல் ஒபாமா மீண்டும் விளக்கம் | Makkal Osai

ஒபாமாவுடன் விவாகரத்தா? - மிச்செல் ஒபாமா மீண்டும் விளக்கம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin