• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை: 18 நாளில் 6வது சம்பவம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 7, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை: 18 நாளில் 6வது சம்பவம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டாக்கா:வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.

இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

நேற்று ஜெஸ்ஸோர் மாவட்டம் ஆருவா கிராமத்தைச் சேர்ந்த ராணா பிரதாபை (35) மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஷிவ்பூர் உப மாவட்டம் நர்சிங்கடி நகரைச் சேர்ந்தவர் சரத் சக்ரவர்த்தி மணி (40). இவர் சார் சிந்தூர் பஜாரில் மளிகைக்கடை நடத்தி வந்தார்.

நேற்று இரவு கடையில் இருந்த அவரை மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த சரத் சக்ரவர்த்தியை அப்பகுதி மக்கள் மீட்டுச்சென்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

சரத் சக்ரவர்த்தி மணி தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு, சில ஆண்டுக்கு முன் வங்கதேசத்திற்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் கடந்த 18 நாட்களில் இந்துக்கள் கொல்லப்பட்ட 6-வது சம்பவம் இதுவாகும். இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Read More

Previous Post

LPG | கேஸ் மானியம் பெற இந்த இரண்டும் கட்டாயம்.. எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்..! | வணிகம்

Next Post

Tamilmirror Online || ஜனாதிபதி செயலகத்திற்குப் பின்னால் சல்லாபம்: மாணவியும் கான்ஸ்டபிளும் கைது

Next Post
Tamilmirror Online || ஜனாதிபதி செயலகத்திற்குப் பின்னால் சல்லாபம்: மாணவியும் கான்ஸ்டபிளும் கைது

Tamilmirror Online || ஜனாதிபதி செயலகத்திற்குப் பின்னால் சல்லாபம்: மாணவியும் கான்ஸ்டபிளும் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin