Last Updated:
இந்த அநீதிகளுக்கு எதிராக வங்கதேசத்தில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் அசினா அந்த நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், வங்கதேசத்தின் கேஷப்பூரைச் சேர்ந்த 38 வயதான ராணா பிரதாப் பைராகி என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்த அவர், பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகவும் இருந்தார். இந்நிலையில், அவர் தொழிற்சாலையில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ராணா பிரதாப் பைராகியை துப்பாக்கியால் சுட்டது.
தலை மற்றும் தொண்டையில் மூன்றுமுறை சுட்டதில் சம்பவ இடத்திலேயே ராணா பிரதாப் உயிரிழந்தார். கொல்லப்பட்ட ராணா பிரதாப், பூர்போ பங்களார் (Purbo Banglar) கம்யூனிஸ்ட் கட்சி என தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்ததால் அவர்மீது 4 வழக்குகள் இருப்பதாகவும்,
முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வங்கதேச காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வங்கதேசத்தின் காளிகஞ்ச் என்ற பகுதியில் 40 வயதான இந்து மதத்தைச் சேர்ந்த கைம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
நிலத்தரகாறு காரணமாக அவரது முடியை வெட்டியதுடன், மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனாவின் பதவி விலகலுக்குப் பிறகு, வங்கதேசத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு சீர்குலைவைப் பயன்படுத்தி, சிறுபான்மையினர் மற்றும் முன்னாள் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
வங்கதேசத்தில் இந்து மத பத்திரிகையாளர் ராணா பிரதாப் சுட்டுக் கொலை.. மீண்டும் உச்சகட்ட பதற்றம்


