Last Updated:
உச்சநீதிமன்றத்தில் புதிய வக்ஃப் சட்டத்துக்கு எதிரான வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவன், அபிஷேக் மனு சிங்வி வாதிட்டனர். இன்றும் விசாரணை தொடரும்.
உச்சநீதிமன்றத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிரான வழக்கில் இன்றும் விசாரணை தொடர உள்ளது.
புதிய வக்ஃப் சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை இருப்பதாக உச்சநீதிமன்ற விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குறிப்பிட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வக்ஃப் சொத்துக்களை கைப்பற்றுவதே புதிய சட்டத்தின் நோக்கம் எனவும்,
இஸ்லாமியர்களின் உரிமைகளை மொத்தமாக அபகரிக்கும் திட்டம் எனவும் குற்றம்சாட்டினார். வக்ஃப் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 3D மற்றும் 3E பிரிவுகள் வரைவு மசோதாவில் இல்லை எனவும், நாடாளுமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அது சேர்க்கப்பட்டதாகவும் கபில்சிபல் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், அந்த பிரிவுகள் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவில்லையா என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, புதிய வக்ஃப் சட்டம் மதச்சார்பின்மையை வேரறுக்கும் சட்டம் என மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் வாதிட்டார். இதுவரை 5 மாநிலங்களில் மட்டுமே வக்ஃப் சொத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதை சுட்டிககட்டிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதன் பின்னர், புதன்கிழமை விசாரணை தொடரும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


