ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. பாரம்பரியமான ஆளுமைத்திறனை சோதிக்கும் பரிசோதனை போன்றது அல்ல இது. கேள்வி, பதிலாக இல்லாமல் வெறும் படம் மட்டுமே இதிலிருக்கும். ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருளையோ, மனித உருவத்தையோ அல்லது ஓவியத்தையோ பார்க்கும் போது, நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் படத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும் போதும், நமது மூளை வெவ்வேறு விதமாக எடுத்துக்கொள்கிறது.
அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படம் உங்கள் பார்வைத்திறனுக்கு சோதனை கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். இந்தப் படத்தில் வகுப்பறை ஒன்றுள்ளது. அதில் சில மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வகுப்பறையில் ஏதோவொரு இடத்தில் உங்கள் கண்களுக்கு தெரியாமல் கண்ணாடி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதைதான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
கூர்மையான பார்வைத்திறன் உள்ள நபர்களால் மட்டுமே இதற்கான சரியான விடையை கண்டுபிடிக்க முடியுமாம். இதோ கீழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் வெறும் 6 நொடி மட்டுமே.
6 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
பெரியவர்களும் சிறியவர்களும் விளையாடும் வகையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகான வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்க, ஒரு சில மாணவர்கள் ஆர்வமாக பாடத்தை கவனிக்கிறார்கள். ஒரு மாணவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். இன்னொரு மாணவன் காகித விமானத்தை பறக்கவிட்டு கொண்டிருக்கிறான். ஆனால் இந்த அறையில் உங்கள் கண்களுக்கு எளிதில் புலப்படாமல் கண்களுக்கு அணியும் கண்ணாடி ஒன்று மறைந்திருக்கிறது. அதைதான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.
இதையும் படிங்க:
மனித மூளைக்குள் சிப்.. சோதனையை தொடங்கிய எலான் மஸ்க் நிறுவனம்
படத்திலுள்ள ஒவ்வொரு மாணவனின் இருக்கைகளையும் கவனமாக பாருங்கள். இன்னும் தெரியவில்லையா? சரி, வேண்டுமானால் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். வகுப்பறையில் மாணவன் ஒருவன் காகித விமானம் செய்து பறக்கவிட்டு கொண்டிருக்கிறான் அல்லவா. அவனது இருக்கையின் கீழ் உன்னிப்பாக பார்த்தால் உங்களால் ஓரளவிற்கு கண்டுபிடிக்க முடியும். என்ன இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா?
இதோ நீங்கள் எளிதில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக ஒளிந்திருக்கும் கண்ணாடியை கீழே உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளோம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நீங்கள் 6 நொடியில் கண்டுபிடித்திருந்தால், உங்கள் பார்வைத்திறன் மிகவும் நன்றாக இருப்பதாக நீங்கள் பெருமிதப்படலாம். இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என அய்வுகள் கூறுகின்றன. நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
சரி, இப்போது சொல்லுங்கள், உண்மையாகவே நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் கண்ணாடியை கண்டுபிடித்தீர்களா இல்லையா?
link : https://www.jagranjosh.com/general-knowledge/optical-illusion-find-lost-glasses-1707485000-1
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…