Last Updated:
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் வீரவள்ளி பள்ளியில், ஆசிரியரை தாக்கிய பத்தாம் வகுப்பு மாணவனின் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பள்ளி மாணவன், தன்னைக் கண்டித்த ஆசிரியரை தாக்கி நிலைகுலைய வைத்த காட்சிவைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் வீரவள்ளியில் ஜில்லா பரிசத் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எப்போதாவது ஒரு நாள் பள்ளிக்கு வரும் அம்மாணவன் பள்ளிக்கு வந்தபோது ஆசிரியர் கடிந்து கொண்டிருக்கிறார். மேலும் அந்த மாணவன் உட்பட சரியாக படிக்காத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர் உட்கார வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த மாணவனுக்கும், வகுப்பு ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த மாணவன் திடீரென்று எழுந்து வகுப்பாசிரியர் நெஞ்சில் ஓங்கி குத்தியுள்ளார். இதனால் அங்கிருந்து ஆசிரியர்கள், மாணவ மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். தனைத்தொடர்ந்து ஆசிரியரை மீண்டும் தாக்க முயன்ற அந்த மாணவனை சக மாணவர்கள் பிடித்து மேலும் ஆசிரியரை தாக்காமல் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
இதனையடுத்து அந்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் பள்ளியில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வகுப்பறைக்கு வெளியே அமரவைத்ததால் ஆத்திரம்.. ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவன்.. அதிர்ச்சி வீடியோ!


