பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த((Lohan Ratwatte)) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக அவர் இன்று(06) கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பதிவுசெய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நேற்று (05) பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

