• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

லெபனானைத் தொடர்ந்து காசாவிலும் விரைவில் போர் நிறுத்தம்: ஜனவரிக்குள் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை | US to start immediately on fresh push for Gaza ceasefire

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
லெபனானைத் தொடர்ந்து காசாவிலும் விரைவில் போர் நிறுத்தம்: ஜனவரிக்குள் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை | US to start immediately on fresh push for Gaza ceasefire
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்குள், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. காசா பகுதி​யில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்​துள்ளனர். ஒரு லட்சத்​துக்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​துள்ளனர். இந்த சூழலில் எகிப்து அரசின் சமரசத்

​தின் ​பேரில் இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்​தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வருகிறது. இதுதொடர்பாக எகிப்து அரசின் உயர்​நிலைக் குழு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நேற்று முக்கிய பேச்சு​வார்த்​தை நடத்​தி​யது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தீவிர​வா​திகள் இஸ்ரேலில் நடத்திய தாக்​குதலில் 254 இஸ்ரேலியர்கள் பிணைக் கை​தியாக பிடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் 154 பேர் விடுதலை செய்​யப்​பட்டுள்ளனர். இன்ன​மும் 100 பேர் ஹமாஸ் தீவிர​வா​திகளின் பிடி​யில் உள்ளனர். அவர்களை விடுவிக்க, இஸ்ரேல் சிறை​களில் உள்ள 1,000 ஹமாஸ் தீவிர​வா​திகளை விடுதலை செய்ய வேண்​டும் என்று கோரப்​பட்டுள்ளது.

இவை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு​வார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஹமாஸ் வட்டாரங்கள் கூறும்​போது, “லெபனான் உடன் எந்த நிபந்​தனை​யும் இன்றி இஸ்ரேல் அரசு போர் நிறுத்த ஒப்பந்​தம் மேற்​கொண்​டிருக்​கிறது. காசா​விலும் போர் நிறுத்​தத்தை அமல்​படுத்த விரும்​பு​கிறோம். ஆனால், இஸ்ரேல் அரசு போர் நிறுத்​தத்தை விரும்ப​வில்லை” என்று தெரி​வித்தன.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “தற்​போதைய அமெரிக்க அ​திபர் ஜோ பைடனின் பதவிக் ​காலம் வரும் ஜனவரி​யில் முடிவடைகிறது. அதற்​குள் ​காசா​வில் ​போர் நிறுத்​தம் அமலாகும். இதுதொடர்​பாக இஸ்​ரேல்​ அரசு – ​காசா நிர்​வாகம்​ இடையே ​விரை​வில்​ ஒப்​பந்​தம்​ கையெழுத்​தாகும்​” என்​று தெரி​வித்​தன. இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்​துக்​கும், லெபனானின் ஹிஸ்​புல்லா தீவிர​வா​தி​களுக்​கும் இடையே போர் நீடித்து வந்தது. கடந்த செப்​டம்பர் 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்​ரூட்​டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்​குதலில் ஹிஸ்​புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்​தார். இதைத்தொடர்ந்து இரு நாடு​களுக்​கும் இடையே போர் தீவிரமடைந்​தது.

இந்த சூழலில் அமெரிக்கா, பிரான்ஸின் சமரச முயற்​சி​யால் இஸ்ரேலுக்​கும், லெபனானுக்​கும் இடையே நேற்று முன்​தினம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்​தானது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்​போது, “எல்​லைப் பகுதி​களில் இருந்து 40 கி.மீ. தொலை​வுக்கு ஹமாஸ் தீவிர​வா​திகள் பின்​வாங்க வேண்​டும். அந்த பகுதி​களில் ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் பாது​காப்பு பணியில் ஈடுபடு​வார்கள். லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் முழு​மையாக வாபஸ் பெறப்​படும். 28-ம் தேதி அதிகாலை முதல்போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. எனினும், லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் முழு​மையாக வெளியேற சில நாட்கள் ஆகலாம். இந்த போர் நிறுத்தம் 60 நாட்கள் அமலில் இருக்​கும்” என்று தெரி​வித்தன.

இதுகுறித்து லெபனான் அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்​ப​தால் பல்லா​யிரக்​கணக்கான மக்கள் வீடு​களுக்கு திரும்பி வருகின்​றனர். பெய்​ரூட்​டில் பெரும்​பான்​மையான வீடுகள் இடிந்து தரைமட்​ட​மாகி இருப்​ப​தால் புதிய வீடுகளை கட்ட சர்வதேச நாடு​களின் உதவியை எதிர்​பார்க்​கிறோம்’’ என்று தெரிவித்தன.

இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் அப்பகுதியில் சில மர்மநபர்கள் நேற்று வாகனத்தில் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.



Read More

Previous Post

மின்சார ஆக்டிவா: ஹோண்டா அறிமுகம்

Next Post

எலான் மஸ்க் என் ட்விட்டர் கணக்கை முடக்கினால், அதுவே எனக்கு வெற்றிதான் – சிவகார்த்திகேயன் | Makkal Osai

Next Post
எலான் மஸ்க் என் ட்விட்டர் கணக்கை முடக்கினால், அதுவே எனக்கு வெற்றிதான் – சிவகார்த்திகேயன் | Makkal Osai

எலான் மஸ்க் என் ட்விட்டர் கணக்கை முடக்கினால், அதுவே எனக்கு வெற்றிதான் - சிவகார்த்திகேயன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin