• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

லெபனானில் முழு அளவில் போருக்கு இஸ்ரேல் தயார்

GenevaTimes by GenevaTimes
June 20, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
லெபனானில் முழு அளவில் போருக்கு இஸ்ரேல் தயார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா பதற்றத்தை தணிக்க முயன்றபோதும் லெபனானுடன் முழு அளவிலான போருக்கான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைப் பகுதியில் பரஸ்பரம் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக அமெரிக்க பிரதிநிதியான அமோஸ் ஹொச்ஸ்டைன் லெபனானுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

எட்டு மாதங்களுக்கு முன்னர் காசா போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மோதல் அதிகரித்திருக்கும் நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஒருவர் கடந்த வாரம் கொல்லப்பட்டதை அடுத்து நிலைமை மோசமடைந்துள்ளது.

இதனையடுத்து இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் மீது ஹிஸ்புல்லா இதுவரை இல்லாதவகையில் ரொக்கெட் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது.

இந்நிலையில் இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை சேதப்படுத்துவது தொடர்பில் ஹிஸ்புல்லா தலைவர் செய்யிது ஹசன் நஸ்ரல்லா எச்சரித்திப்பதோடு அந்தத் துறைமுகத்தின் ட்ரோன் படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு எக்ஸ் சமூகதளத்தில் பதிலளித்திருக்கும் காட்ஸ், ‘ஹிஸ்புல்லா மற்றும் லெபனானுக்கு எதிராக ஆட்டத்தின் விதிகளை மாற்றும் தீர்மானத்தை எடுக்கும் தருணத்தை நாம் மிகவும் நெருங்கியுள்ளோம். முழு அளவிலான போர் ஹிஸ்புல்லாவை அழித்துவிடும் என்பதோடு லெபனானை மோசமாக தோற்கடித்துவிடும்’ என்று எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் லெபனானில் தாக்குதல் ஒன்றுக்கான செயல்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டிருப்பதாகவும் தளத்தில் துருப்புகளின் தயார் நிலையை தொடர்ந்து அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் பின்னர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படும் வரை தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என்று ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு லெபனானில் எல்லை கிராமமான கியாம் உட்பட பல பகுதிகளிலும் இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா தரப்பு தெரிவித்துள்ளது.

மறுபுறம் சிரியாவின் தெற்கில் இராணுவத் தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக சிரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

The post லெபனானில் முழு அளவில் போருக்கு இஸ்ரேல் தயார் appeared first on Thinakaran.

Read More

Previous Post

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!

Next Post

இந்த ஒரு கிராமத்திற்காக பாகிஸ்தானுக்கு 12 கிராமங்களை வழங்கிய இந்தியா.. எந்த கிராமம் தெரியுமா?

Next Post
இந்த ஒரு கிராமத்திற்காக பாகிஸ்தானுக்கு 12 கிராமங்களை வழங்கிய இந்தியா.. எந்த கிராமம் தெரியுமா?

இந்த ஒரு கிராமத்திற்காக பாகிஸ்தானுக்கு 12 கிராமங்களை வழங்கிய இந்தியா.. எந்த கிராமம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin