லெபனானில் ஹிஸ்புல்லாவினரின் பேஜர்களை தொடர்ந்து, வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
லெபனானில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதில் சிறுமி உட்பட 12 பேர் உயரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தான் காரணம் என லெபனான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த பதற்றமே தணியாத நிலையில் ஹிஸ்புல்லாவினர் பயன்படுத்தி வந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியுள்ளன.
பேஜர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறியுள்ளன. இதில் 20 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், வாக்கி டாக்கிகள் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, பேஜர்கள் வாங்கிய அதே நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தைவானை சேர்ந்த கோல்ட் அப்பலோ என்ற நிறுவனம், இந்த பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:
இலங்கை அதிபர் தேர்தல் – வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்…
பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
