ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்ட நிலையில், கடந்த 2024ம் ஆண்டு சோனலுக்குக் குழந்தை பிறந்தது. அவர்கள் குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு வேறொரு பெற்றோருக்கு விற்றுவிட்டனர். இதையடுத்து இரண்டு பேரும் டெல்லியில் குடியேறினர்.
அங்கு சோனலுக்கு அதே பகுதியில் வசிக்கும் ரேஷ்மி என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காரணமாக அடிக்கடி ரேஷ்மி வீட்டிற்கு சோனல் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ரேஷ்மியின் கணவர் துர்கேஷுடன் சோனலுக்குத் தொடர்பு இருப்பதாக நிகில் சந்தேகப்பட ஆரம்பித்தார்.
ஒரு நாள் சோனலுக்கும், துர்கேஷுக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் சாட்டிங்கைப் பார்த்த நிகிலுக்கு சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. இதனால், சோனலுக்கும், நிகிலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட ஆரம்பித்தது.
இந்த நிலையில் சோனல் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இந்த முறை குழந்தையை கலைத்துவிடலாம் என சோனல் தெரிவித்திருக்கிறார். ஆனால் நிகில் இக்குழந்தையைக் கலைக்க வேண்டாம் என்றும் இக்குழந்தை பிறந்தவுடன் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்றும் நிகில் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அதனைக் கேட்காத சோனல் நிகிலுக்குத் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று கருவைக் கலைத்திருக்கிறார். ரேஷ்மியின் கணவர் சொல்லித்தான் சோனல் கருவைக் கலைத்ததாக நம்பிய நிகில், தலைக்கேறிய கோபத்தில் கடும் தகராறு செய்துள்ளார். இந்த சண்டை முற்றவே சோனல் ரேஷ்மியின் வீட்டிற்குச் சென்று அங்கு வசிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு கோபம் தணிந்த நிகில் அடிக்கடி போன் மூலம் சமாதானமாகப் பேசி மீண்டும் வீட்டிற்கு வரும்படி சோனலைக் கேட்டுக்கொண்டார். ஆனால் சோனல் வர மறுத்துவிட்டார்.
இந்நிலையில் ரேஷ்மி தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகச் சென்றுள்ளார். ரேஷ்மியின் கணவரும் வெளியில் சென்றிருந்தார். வீட்டில் சோனலும், ரேஷ்மியின் 6 மாத குழந்தையும் மட்டுமே தனியாக இருந்துள்ளனர். அந்நேரம் நிகில் அங்குச் சென்று தன்னுடன் வரும்படி சோனலை வற்புறுத்த ஆரம்பித்தார். சோனல் வர மறுத்தால் அவரை கொலை செய்து விடுவது என்ற நோக்கத்துடன், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிளேடு ஒன்றை கையோடு எடுத்துச் சென்றுள்ளார் நிகில்.
இருவருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறு முற்றிய நிலையில், சோனலின் வாயில் டேப்பை ஒட்டி அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார் நிகில். இதே போன்று 6 மாத குழந்தையின் வாயிலும் டேப் ஒட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார் நிகில்.
பச்சைக் குழந்தை என்றும் பாராமல் கொலையை அரங்கேற்றிவிட்டு, பழைய டெல்லி, பரோலி, ஹால்வா என சுற்றித்திரிந்தவர் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்துள்ளார். அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்த போலீசார் நிகிலை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். உண்மையில் சந்தேகம் தான் கொலைக்குக் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Uttarakhand (Uttaranchal)
July 10, 2025 10:33 PM IST

