லிட்டில் இந்தியா, சையத் அல்வி சாலையில் அதிக அளவில் பெய்யும் மழைநீர் சேமிப்பிற்கான புதிய முழுமையான தானியங்கி நீர் இறைக்கும் பம்பிங் நிலைய கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
அது நிலத்தடி தொட்டியுடன் கூடிய சிறப்பம்சத்துடன் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சையத் அல்வி பம்பிங் ஸ்டேஷன் என்று அழைக்கப்படும் அது, ஜாலான் புசாரில் ரோச்சோர் கால்வாயின் (Rochor Canal) அருகே அமைந்துள்ளது.
அதன் கொள்ளளவு சுமார் நான்கு ஒலிம்பிக் நீர்நிலை அமைப்பின் அளவு அல்லது சுமார் 9,300 கன மீட்டர் கொள்ளளவு கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்றால், பலத்த மழை பெய்யும் போதும் அதற்குப் பின்னரும் நிலத்தடி தொட்டியிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு, அது ரோச்சோர் கால்வாயின் கீழ்நிலைப் பகுதிக்குள் செலுத்தப்படும் என்று தேசிய தண்ணீர் அமைப்பிப்பு (PUB) தெரிவித்துள்ளது.
பொதுவாக கடும் மழை பெய்யும்போது கால்வாயில் நீர் மட்டம் அதிகமாக இருக்கும், அப்போது மழைநீர் சேமிப்பு வடிகால்கள் நிரம்பி வழியாமல் இருப்பதை இது உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, சையத் அல்வி சாலை வடிகால்களில் உள்ள நீர் இறைக்கும் நிலையத்தில் மடைகள் (floodgates) வசதியும் உள்ளன. இதனால் ரோச்சோர் கால்வாயிலிருந்து ஜாலான் பெசார் பகுதிக்கு தண்ணீர் திரும்புவதைத் தடுக்க முடியும்.
சுமார் S$33 மில்லியன் வசதியின் அமைக்கப்பட்ட இந்த கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்ததாக நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று ஜூன் 23 அன்று அறிவித்தார்.
ஜாலான் பெசாரில் குறிப்பாக 2000 முதல் 2010 வரை தாழ்வான இடங்கள் வெள்ள நீரால் சவால்களை எதிர்கொண்டன, இதனால் இந்த உள்கட்டமைப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

PHOTOS: Singapore’s National Water Agency PUB

