லிட்டில் இந்தியாவில் புகையிலை வைத்திருந்த 27 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் பிடிபட்டார்.
கடந்த நவ.9 ஆம் தேதி, பஃபலோ சாலை சந்திப்பில், 16 மெல்லும் வகை புகையிலை வைத்திருந்த அவர் இரவு 10 மணிக்கு மேல் பிடிபட்டார்.
அவர் வேலை அனுமதி சீட்டு வைத்திருந்த நபர் என்றும், அவருக்கு S$2,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் சுகாதார அறிவியல் ஆணையம் கூறியதாக தமிழ் முரசு குறிப்பிட்டுள்ளது.
மெல்லும் வகை புகையிலைக்கு சிங்கப்பூர் தடை வித்தித்துள்ளது. அதிலுள்ள நிகோடின் என்னும் வேதிப்பொருள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகை புகையிலை பொருட்களை இறக்குமதி செய்வது, விநியோகிப்பது, விற்பனை செய்வது அல்லது வைத்திருப்பது சட்டவிரோதமானது, மேலும் அது கடுமையான தண்டனைகளுக்கும் வழிவகுக்கும்.
புகையிலை வைத்திருப்பவர், வாங்குபவர், விற்பவர் அல்லது பயன்படுத்துவோருக்கு S$2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

