லிட்டில் இந்தியாவில் ஆடவரை சந்துக்குள் இழுத்துச் சென்று கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படும் 22 வயதுமிக்க இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவ.8 ஆம் தேதி அதிகாலை 3.55 மணியளவில் டன்லப் ஸ்ட்ரீட்டில் (Dunlop Street) நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதிய VIVO V60 Giveaway – கைபேசிகளை இலவசமாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!
28 வயதுடைய நபரை சந்து பகுதிக்குள் இழுத்துச்சென்ற அந்த இளைஞர், அவரைத் தாக்கி பணம் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர், பாதிக்கப்பட்ட நபர் சுமார் S$190 பணத்தை இளைஞரிடம் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட நபர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர் விசாரணைகள் மற்றும் சிசிடிவி கேமெராவின் உதவியுடன் மத்திய காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக இளைஞரின் அடையாளத்தை கண்டுபிடித்து வெறும் 20 மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்தனர்.
சம்பவத்தின் போது அந்த இளைஞர் அணிந்திருந்த ஆடைகள் சாட்சிப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டன.
கொள்ளை அடித்தது மற்றும் காயம் ஏற்படுத்தியதாக இளைஞர் மீது இன்று (நவ.10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
இதுபோன்ற குற்றங்களுக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோத பயணச் சேவை வழங்கிய வெளிநாட்டு ஓட்டுநர்… லஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி

