லிட்டில் இந்தியாவில் காவல்துறை அதிகாரியை சினமூட்டும் வகையில் கேலி கிண்டல் செய்த மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை தடுப்பு வேலி அமைத்திருந்தது, அதனை கடந்து செல்ல அனுமதி வழங்காத காவல்துறை அதிகாரியை அவர்கள் கேலி கிண்டல் பேசியதாக சொல்லப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை நடத்தும் சிங்கப்பூரருக்கு S$7,000 அபராதம்
இந்நிலையில், நேற்று அக்டோபர் 28 அன்று, அவர்கள் மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் 38 வயதான அலெக்ஸ் குமார் ஞானசேகரனுக்கு S$4,000 அபராதமும், 45 வயதான முகமது டினோ மார்சியானோ அப்துல் வஹாப் மற்றும் 33 வயதான முகமது யூசோஃப் முகமது யஹியா ஆகியோருக்கு தலா S$5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அவர்கள் மூவரும் காவல்துறை அதிகாரியை கேலி செய்யும் போது அதனை வீடியோவாக பதிவு செய்த 39 வயதான மோகனன் வி. பாலகிருஷ்ணன் என்பவரும் செப்.மாதம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு S$3,500 அபராதம் விதிக்கப்பட்டது.
பொது ஊழியராக கடமையைச் செய்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரியை அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தியதாக மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அவர்களில் டினோ மற்றும் யூசோஃப் இதற்கு முன்பும் இதே போல பொது ஊழியர்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கழிவறையில் ஆடவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்தியருக்கு சிறை, பிரம்படி
இரவு முழுவதும் கிளப்பில் மது அருந்திய அந்த நான்கு பேரும், செப்.22ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், கிச்சனர் சாலைக்கு அருகிலுள்ள சாம் லியோங் சாலையின் பின்புறப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது போலீஸ் தடுப்பு வேலியை கண்டனர்.
கொலை நடந்த காரணத்தால் அந்த இடத்தில் காவல்துறை தடுப்பு வேலி அமைத்திருந்தது. அதனால் பொதுமக்களுக்கு அப்பகுதியை கடந்து செல்ல தடை இருந்தது.
இதனால் அங்கிருந்த காவல்துறை அதிகாரி அவர்களை அந்தப் பகுதியிலிருந்து விலகி வேறு வழியில் செல்லுமாறு அறிவுறுத்திய போதிலும், அதனை காதில் வாங்காத அவர்கள் தடுப்பு வேலியை தான் கடந்து செல்வோம் என மல்லுக்கட்டினர்.
காவலரை நோக்கி, “நாங்கள் வரி செலுத்துகிறோம்” என்றும், “100 சதவீதம் கேங்ஸ்டர் கும்பலை இறக்கிக் காட்ட முடியும்” என்ற வார்த்தைகளையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் காவலரை நோக்கி, “அவர் அழ போகிறார்” என்றும் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

