லிட்டில் இந்தியாவில் தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளை வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி முதல் அக்.25 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை லிட்டில் இந்தியாவிற்குள் பொது இடங்களில் மது அருந்த அனுமதி இல்லை என்றும் போலீசார் மீண்டும் வலியுறுத்தினர்.
அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு மதுபானம் அருந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்ட இடமாக லிட்டில் இந்தியா பொது இடங்கள் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டங்களில் மதுபானக் கட்டுப்பாடு உள்ள பொது இடத்தில் மது அருந்தினால், S$1,500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும் மீண்டும் மீண்டும் அதே தவறு செய்பவர்களுக்கு S$3,000 அபராதம், நான்கரை மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அனுமதிக்கப்பட்ட வர்த்தக நேரத்துக்கு மேல் மதுபானம் சப்ளை செய்யும் சில்லறை கடை விற்பனையாளர்களின் மதுபான உரிமங்களும் ரத்து செய்யப்படலாம்.
மாற்றம் செய்து வெடிபொருட்களை வெடிக்கச் செய்யக்கூடாது, சட்ட விரோதமாக பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
குடிபோதையில் கார்களை அடித்து தும்சம் செய்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர்