லோயாங் வே மற்றும் லோயாங் லேன் சந்திப்பில் ஏற்பட்ட லாரி தொடர்புடைய விபத்தில் 27 வயது ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் (ஜூன் 8) மாலை கிட்டத்தட்ட 5:20 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு (Migrant domestic workers) முக்கிய அறிவிப்பு – செப்.1 முதல் கட்டாயம்
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு உயிரிழந்தார்.
இந்நிலையில், கவனமின்றி வாகனத்தை ஓட்டியதாக 41 வயதுடைய லாரி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்து எட்டு மாதங்கள் ஆன நிலையில் பரிதாப மரணம்
மரணித்தவர் விமானப் பொறியாளர் என்றும், அவர் சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்து எட்டு மாதங்கள் மட்டுமே ஆவதாகவும் இறந்தவரின் உறவினர்கள் ஷின் மின் செய்தியிடம் தெரிவித்தனர்.
அவர் வழக்கமாக சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தினமும் பயணம் செய்து வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்ப முடிகிறது.
சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானம்.. சோதனையில் பயணி கைது
6 மாதங்களில் 2வது விபத்து
கடந்த 6 மாதங்களில் மட்டும் அங்கு இரண்டாவது விபத்து நடந்தேறியுள்ளது.
கடந்த ஜனவரி 24 அன்று அதே சந்திப்பில் ஒரு விபத்து நடந்தது. அதில் காருடன் ஏற்பட்ட விபத்தில் 31 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் இறந்தார்.
அந்த விபத்தை தொடர்ந்து ஆறு மாதங்கள் கழித்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வெளிநாட்டு ஓட்டுநர் கைது
விபத்தில் சம்பந்தப்பட்டவர் வெளிநாட்டு ஓட்டுநர் என்றும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர் காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார் என்றும் லாரி நிறுவனத்தின் பிரதிநிதி ஷின் மின் செய்தியிடம் தெரிவித்தார்.
PHOTO: Shin Min Daily News

