புக்கிட் திமாவில் இன்று (அக்.9) லாரியுடன் ஏற்பட்ட மோதலில் 29 வயதுமிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் PIE நோக்கி செல்லும் இங் நியோ அவென்யூவில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்திய கட்டுமான ஊழியருக்கு சிறை.. ஜன்னல் வழியே பெண்ணை கண்டு, படுக்கையறைக்குள் நுழைந்த ஊழியர்
பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) துணை மருத்துவர்கள் அந்த ஓட்டுநரை சோதித்தனர்.
ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக துணை மருத்துவர்கள் உறுதி செய்து அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் தொடர்புடைய 49 வயதான லாரி ஓட்டுநர் ஒருவர் விசாரணைகளுக்கு உதவி வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்கின்றன.
சாலை ஓரத்தில் நீல நிற கூடாரம் அமைக்கப்பட்டு இருப்பதை புகைப்படங்கள் வாயிலாக காணமுடிந்தது.
தலை நசுங்கி இறந்த வெளிநாட்டு ஊழியர்… மேற்பார்வையாளர் மீது குற்றம் இல்லை என தீர்ப்பு
PHOTOS: SHIN MIN DAILY NEWS