விட்லி சாலையில் பின்னால் வந்த லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
SG Road Vigilante இணைய பக்கத்தில் வெளியான வீடியோ காட்சிகளில், பின்னால் இருந்து வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஓட்டுநர் சாலையில் தூக்கி வீசப்பட்டதைக் காண முடிந்தது.
சிங்கப்பூரிலிருந்து சென்னை.. பயணியின் உடைமையில் அடையாளமிட்டு அனுப்பிய சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள்
தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையில் முகம் குப்புற விழுந்தார், அதிர்ஷ்டவசமாக அவர் உடனே எழுந்து செல்வதையும், இதனால் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

நேற்று சனிக்கிழமை (ஜூலை 5) காலை 10.10 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது என்று MS News குறிப்பிட்டுள்ளது.
விட்லி சாலையில் உள்ள சந்திப்பில் லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
சிங்கப்பூரில் விளம்பரம் செய்து தகாத தொழிலில் வெளிநாட்டு பெண்களை ஈடுபடுத்திய வெளிநாட்டு பெண்
அதே போல, காலை 10.15 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், 22 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், 31 வயதுடைய லாரி ஓட்டுநர் போலீஸ் விசாரணைகளுக்கு உதவுகிறார்.
இரு வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடுதியில் ச#ண்டை: ஊழியருக்கு சிறை – என்ன நடந்தது?