லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவத்தில் 47 வயதுடைய ஊழியர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து கடந்த நவம்பர் 13 ஆம் தேதி மாலை 7 மணியளவில், காமன்வெல்த்தில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
லிட்டில் இந்தியாவில் புகையிலை வைத்திருந்த வெளிநாட்டு ஊழியருக்கு S$2,000 அபராதம்
மோட்டார் சைக்கிளில் சென்றவர் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் என்றும், உணவு விநியோகம் செய்து கொண்டிருந்தபோது லாரியுடன் மோதினார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உணவு விநியோகம் செய்யும் டெலிவரி பையையும் காணலாம்.
விபத்தை தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 வயதுடைய லாரி ஓட்டுநர் ஒருவர் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன.

