• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

லாரி திடீரென பிரேக் போட்டதால் விபரீதம்..அடுத்தடுத்து மோதிய 3 ஆம்னி பேருந்துகள்..உளுந்தூர்பேட்டை ஷாக் | 10 Injured as Three Private Omnibus Buses Collide with Lorry Near Ulundurpet

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
லாரி திடீரென பிரேக் போட்டதால் விபரீதம்..அடுத்தடுத்து மோதிய 3 ஆம்னி பேருந்துகள்..உளுந்தூர்பேட்டை ஷாக் | 10 Injured as Three Private Omnibus Buses Collide with Lorry Near Ulundurpet
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Pavithra Mani

Time
Updated: Tuesday, November 3, 2026, 11:05 [IST]

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே சரக்கு லாரி மற்றும் 3 தனியார் ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு இரண்டு தனியார் ஆம்னி பஸ்களும் பின்னால் வந்து கொண்டிருந்தன.

Ulundurpet Kallakurichi Bus Accident

அடுத்தடுத்து மோதிய பேருந்துகள்

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் உள்ள அரசு ஆய்வு மாளிகை அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, முன்னால் சென்ற சரக்கு லாரி திடீரென நின்றதால், பின்னால் வந்த 3 ஆம்னி பேருந்துகளும் எதிர்பாராதவிதமாக ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

பயங்கர சத்தத்துடன் வாகனங்கள் மோதிக்கொண்டதால் பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். இதில் பேருந்துகள் பலத்த சேதமடைந்தன. ஒரு பெண் உள்பட 10 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

10 பேருக்கு காயம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை போலீசார், காயமடைந்த 10 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த பெண் ஒருவர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே 4 வாகனங்கள் விபத்தில் சிக்கி நின்றதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், போலீசார் மீட்பு வாகனம் மூலம் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary

At least 10 people, including a woman, were injured after three private omnibus buses rammed into a goods lorry in a series of collisions on the Chennai-Trichy National Highway near Ulundurpet.

Read More

Previous Post

நடமாடும் ஆய்வாளர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

Next Post

இணையவழி நிதி மோசடி: மருதானையில் சீன, இந்திய, பங்களாதேஷ் பிரஜைகள் 21 பேர் மடக்கிப் பிடிப்பு! – Sri Lanka Tamil News

Next Post
இணையவழி நிதி மோசடி: மருதானையில் சீன, இந்திய, பங்களாதேஷ் பிரஜைகள் 21 பேர் மடக்கிப் பிடிப்பு! – Sri Lanka Tamil News

இணையவழி நிதி மோசடி: மருதானையில் சீன, இந்திய, பங்களாதேஷ் பிரஜைகள் 21 பேர் மடக்கிப் பிடிப்பு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin