ஃபேரர் பார்க் பகுதியில், லாரியின் பின்புறத்தில் ஆட்டுமந்தைகள் போல வெளிநாட்டு ஊழியர்கள் கூண்டில் அடைக்கப்பட்டு ஏற்றிச்செல்லப்படும் காணொளி இணையத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
அந்த லாரியில் குறைந்தது ஐந்து வெளிநாட்டு ஊழியர்கள் அமர்ந்திருப்பதையும் அந்த காணொளியில் காண முடிந்தது.
சிங்கப்பூரில் இனி இந்த வகை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒர்க் பெர்மிட் அனுமதி கிடையாது – MOM அதிரடி
செராங்கூன் சாலை மற்றும் ரங்கூன் சாலை சந்திப்பில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இரவு 9 மணியளவில் அந்த லாரி காணப்பட்டது.
பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த காட்சியைக் பார்த்ததாக 35 வயதான ராம் பிரசாத் என்பவர் Mothership-பிடம் கூறினார்.
இந்த சம்பவம் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ராம் கூறியுள்ளார்.

அந்த காணொளியின்படி, லாரியின் பின்புறத்தில் குறைந்தது 5 ஊழியர்கள் அமர்ந்திருந்தனர், அதில் ஒருவர் சிறையில் இருப்பதுபோல உலோகக் கூண்டைப் பிடித்திருந்தார்.
அந்த லாரி ஜூரோங்கில் அமைந்துள்ள மரத் தளம் செய்யும் நிறுவனத்துக்குச் சொந்தமானது போல் தெரிகிறது.
அந்த லாரியில் 13 பேர் வரை பயணிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் அந்த இரும்பு கூண்டு பின்னாலிருந்து பூட்டப்பட்டது போல இருந்ததாகவும் வாசகர் கூறினார்.
ஏதாவது ஒரு அவசரநிலை என்றால், உள்ளே இருக்கும் ஊழியர்கள் எப்படி கூண்டில் இருந்து வெளியே வரமுடியும் என்ற தனது கவலையையும் ராம் பகிர்ந்து கொண்டார்.
இப்படி பூட்டிவைத்து “மக்களை ஏற்றிச் செல்வது சட்டப்பூர்வமானதா?” என்றும் ராம் கேள்வி எழுப்பினார்.
சிங்கப்பூரின் சாலைச் சட்ட விதிகளின் கீழ், லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச் செல்வது சட்டப்பூர்வமானது என்றாலும், இதில் பாதுகாப்பு குறித்த கவலைகள் நீண்ட கால பிரச்சினையாகவே இருந்து வருகின்றன.
2026ல் “ஊழியர்களுக்கு வேலை இல்லை.. சம்பளம் உயராது” – பெரும்பாலான முதலாளிகளின் கருத்து

