சிங்கப்பூர்: ஜூலை 16 ஆம் தேதி சுங்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில் 400,000 டாலர்களுக்கு மேல் வரி செலுத்தாமல் சிகரெட் பெட்டிகளை எடுத்து சென்ற 33 மற்றும் 49 வயதுடைய நான்கு பேரை ஜூலை 11 ஆம் தேதி Gul Circle பகுதியில் கைது செய்ததாக தெரிவித்தது.
மேலும் லாரியிலிருந்து வேன்களுக்கு பெட்டிகளை மாற்றி கொண்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டனர். அதனை அதிகாரிகள் சோதனையிட்டபோது வேனில் 480 கார்டன்கள் சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட்களும், 3488 அட்டைப்பெட்டிகளும் லாரியில் இருப்பது தெரிய வந்தது.

