Last Updated:
இந்த திட்டங்களின் மூலமாக 8.2% வட்டி விகிதத்தைப் பெறலாம் என்பதால் சீனியர் சிட்டிசன்களால் இந்த முதலீடு திட்டம் அதிகம் விரும்பப்படுகிறது.
பணத்தை முதலீடு செய்யும் போது நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவோம். ஆனால் சில சமயங்களில் நாம் செய்யும் முதலீடு நமக்கு இழப்பையும் ஏற்படுத்தி கொடுக்கலாம்.
இந்த அனுபவத்தை பலரும் பெற்றிருக்க கூடும். அதிலிருந்து பாடம் பெற்று கவனமாக முதலீடு செய்ய நாம் ஆரம்பிப்போம். முதலீடு செய்வதில் ஆபத்தான திட்டங்கள் உள்ளன. இதில் கிடைத்தால் பெரிய அளவு லாபம் கிடைக்கும். அதே நேரம் இழப்பு ஏற்பட்டால் அதுவும் பெரியதாக தான் இருக்கும்.
இந்நிலையில் அதிக ஆபத்து இல்லாத அதே நேரம் லாபத்தைத் தரக்கூடிய சில திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சாமானிய மக்களுக்கு வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்கள் அதிக ஆபத்து இல்லாத முதலீடுகளாக கருதப்படுகின்றன. குறைவான வருமானத்தை கொடுத்தாலும் அவை நிலையானதாக இருக்கின்றன. இந்தியாவில் நீண்ட பல ஆண்டுகளாக இந்த வங்கி சேமிப்பு முறை தான் பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலும் இதற்கு வரி சலுகைகள், விளக்கமான வட்டி போன்ற பலன்கள் கிடைக்கின்றன. அதேபோன்று தங்கத்தில் முதலீடு செய்வது என்பது தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்வதால் அதில் முதலீடு செய்வது என்பது லாபம் தரக்கூடிய முதலீடாக அமையும் என்று பலரும் கருதுகிறார்கள்.
இதே போன்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமும் நல்ல வருமானத்தைத் தருகிறது. இதில் ஆயிரம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளை 5 ஆண்டுகளுக்கு செய்யலாம். இந்த திட்டங்களின் மூலமாக 8.2% வட்டி விகிதத்தைப் பெறலாம் என்பதால் சீனியர் சிட்டிசன்களால் இந்த முதலீடு திட்டம் அதிகம் விரும்பப்படுகிறது.
தபால் அலுவலகத்தில் மாதாந்திர முதலீட்டு திட்டமும் நல்ல லாபத்தைக் கொடுப்பதாக அமைகிறது. குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஐந்து ஆண்டுகளுக்கு இதில் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கு திட்டத்தின் கீழ் 15 லட்ச ரூபாய் வரையில் தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
பொறுப்பு துறப்பு : பொதுவான தகவல்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. முதலீடு செய்யும் முன் துறைசார்ந்த நிபுணர்களை ஆலோசித்துக் கொள்ளவும்
July 16, 2025 9:52 PM IST


