Last Updated:
லாட்டரியில் லட்சங்களை வென்றதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது, இந்நிலையில் மறுநாள், அவர் தூங்கி எழுந்து, தயாராகி, லாட்டரி பரிசைப் பெறுவதற்காக டிக்கெட் வாங்கிய கடைக்குச் சென்றார்.
பெரும்பாலான மக்களுக்கு காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை, அவர்கள் சாப்பிட்டது, குடித்தது போன்ற அவர்களின் அன்றாட விவரங்களை தங்கள் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
காலையில் என்ன சாப்பிட்டோம், என்ன உடைகள் அணிந்தோம், எங்கு சென்றோம், எங்கு செல்கிறோம், வெளியே என்ன சாப்பிட்டோம், வீட்டிற்கு செல்கிறோம், என் கார், என் பைக், எனது புதிய காலணிகள், எனது புதிய மொபைல் போன் போன்ற அனைத்து விவரங்களையும் பதிவிடுகிறோம். ஆனால் இதுபோன்ற நடத்தைகள் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதை பற்றி பலர் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு இதே போன்ற பழக்கம் இருந்தது, இந்த பழக்கமானது அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அவர் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் தனது நண்பர்களிடம் தனக்கு லாட்டரியில் வெற்றி கிடைத்ததாகச் சொன்னார். அவர் குரூப் சேட்டில் ஒரு லாட்டரி சீட்டின் புகைப்படத்தை வெளியிட்டு, லாட்டரியில் இவ்வளவு லட்சங்களை வென்றதாகக் கூறினார். இந்த செய்தியை கேட்டதும் குழுவில் இருந்த அனைவரும் அவரைப் பாராட்டினர்.
லாட்டரியில் லட்சங்களை வென்றதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது, இந்நிலையில் மறுநாள், அவர் தூங்கி எழுந்து, தயாராகி, லாட்டரி பரிசைப் பெறுவதற்காக டிக்கெட் வாங்கிய கடைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. கடை உரிமையாளர் லாட்டரியில் வென்ற டிக்கெட் நம்பருக்கு ஏற்கனவே பணம் கொடுத்துவிட்டதாக கூறினார். அதைக் கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்து, “இல்லை சார்.. என்கிட்ட இருக்குற டிக்கெட் தான் ஒரிஜினல்… வேணும்னா பாருங்க” என்று கூறினார். நான் அதைக் காட்டியதும், கடை உரிமையாளர், இதே மாதிரி டிக்கெட்டைக் காட்டிய ஒருவருக்கு ஆன்லைனில் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் செய்திருப்பதாகக் கூறினார்.
இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த இவர், காவல் நிலையத்திற்குச் சென்று இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையின் போது ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்தது குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து, மோசடி செய்த நபரை அடையாளம் கண்டுபிடித்தனர். மோசடி செய்த நபர் வாட்ஸ்அப் குரூப் சேட்டில் உறுப்பினராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். இறுதியில், அசல் லாட்டரி வென்றவருக்கு பணம் கிடைத்தது. ஆன்லைனில் அதிகமாக ஷேர் செய்வது உங்கள் தனியுரிமையையும், பணத்தையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதற்கு இந்த விஷயம் ஒரு சான்றாகும்.
November 22, 2025 1:12 PM IST


