Singapore Pools நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் S$12.7 பில்லியன் மொத்த வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இந்த வருவாய் லாட்டரி டிக்கெட்டுகள், விளையாட்டு பந்தயம் மற்றும் குதிரை பந்தயம் ஆகியவை மூலம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய கட்டுமான ஊழியருக்கு சிறை.. ஜன்னல் வழியே பெண்ணை கண்டு, படுக்கையறைக்குள் நுழைந்த ஊழியர்
இதற்கு முன்னர், 2023-2024 ஆம் நிதியாண்டில் S$12.2 பில்லியன் மொத்த வருவாய் ஈட்டியதே முந்தைய சாதனையாக இருந்தது.
அதன் 97 சதவீத வருவாய், சிங்கப்பூரர்களுக்கும் பரந்த சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டதாக Singapore Pools -இன் 2024-2025 ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில் மீதமுள்ள 3 சதவீதம், வர்த்தக நடவடிக்கைகளுக்கும் தொழில்நுட்ப மேம்பாடுகளிலும் மீண்டும் முதலீடு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பூரில் உள்ள 230 தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக முயற்சிகளுக்கு சுமார் S$2.4 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தலை நசுங்கி இறந்த வெளிநாட்டு ஊழியர்… மேற்பார்வையாளர் மீது குற்றம் இல்லை என தீர்ப்பு