[ad_1]
Last Updated:
மு.க. ஸ்டாலினை லண்டனில் சந்தித்த பென்னி குயிக் குடும்பம், கேம்பர்ளியில் ஜான் பென்னி குயிக் சிலை நிறுவியதற்கு நன்றி தெரிவித்தனர்.
லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னி குயிக்கின் குடும்பத்தினர் சந்தித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், லண்டனில் முதலமைச்சர் ஸ்டாலினை முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக்கின் குடும்பத்தினர் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, பென்னி குயிக்கின் சொந்த ஊரான லண்டன் கேம்பர்ளி நகரில் அவரது சிலை நிறுவியதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பென்னி குயிக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “முல்லைப் பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் – செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் – செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
நேரில் அவர்கள் வைத்த… pic.twitter.com/RrjoShkdi1
— M.K.Stalin (@mkstalin) September 7, 2025
நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க ஜான் பென்னி குயிக் அவர்களது புகழ்” எனத் தெரிவித்துள்ளார்.
September 07, 2025 4:18 PM IST
லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்; நேரில் கோரிக்கை வைத்த பென்னி குயிக் குடும்பத்தினர்