Last Updated:
இன்று இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தப் பயணத்தின் போது இங்கிலாந்து மன்னரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி நேற்று காலை புறப்பட்டுச் சென்றார்.
முதலாவதாக நேற்றிரவு அவர் இங்கிலாந்து சென்றடைந்தார். லண்டன் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியிடம் இங்கிலாந்து வாழ் இந்தியர்களும் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :
July 24, 2025 9:23 AM IST
தமிழ் செய்திகள்/உலகம்/
லண்டன் சென்றடைந்த பிரதமர் மோடி : உற்சாக வரவேற்பு கொடுத்த இங்கிலாந்து வாழ் இந்தியர்கள்!


