லண்டனுக்கு விஜயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரைகள்
அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்ஷ
குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய பதிலடி என்று
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-
“நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் இலங்கையில் எத்தகைய அரசியலை முன்னெடுத்தார்கள்
என்பதை உலகம் இன்று நன்கு அறிந்து வைத்துள்ளது.
நாமலின் உரைகள் இரத்து
சர்வதேச சமூகம் இப்போது
மிகவும் விழிப்புடன் இருக்கின்றது. அதன் விளைவாகவே, கேம்பிரிட்ஜ் மற்றும்
ஒக்ஸ்போர்ட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அவருக்கு இடமளிக்க மறுத்துள்ளன.

ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கையாளப்பட்ட
விதம் குறித்து சர்வதேச மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மத்தியில் பாரிய
விரக்தி நிலவுகின்றது.
இந்த அதிருப்தியே நாமலின் உரைகள் இரத்துச்
செய்யப்பட்டமைக்குப் பிரதான காரணமாகும்.
மாணவர்கள் பாதுகாப்பு
கேள்விகளுக்குப் பயப்படுபவர்கள் அல்லது மற்றவர்கள் கேள்வி கேட்கும் சூழலை
உருவாக்காதவர்கள், இத்தகைய உயரிய கல்வி நிறுவனங்களில் உரையாற்றத்
தகுதியற்றவர்கள்.

ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற எதிர்ப்புகள் எழும்போது, அந்த
நாட்டு கல்வி நிறுவனங்கள் அதற்கு மதிப்பளிப்பது இயல்பான ஒன்றாகும்.
லண்டன் பல்கலைக்கழக மாணவர்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான விவாதம்
குறித்து கவலை தெரிவித்தது முற்றிலும் நியாயமானது.
கடந்த கால கசப்பான
அனுபவங்களே இத்தகைய போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

