முன்னதாக, இந்தச் சம்பவம் நடந்த பிறகு ஜனவரி 12-ம் தேதி கிராம சர்பஞ்ச், துணைப் பிரிவு மாஜிஸ்ட்ரேட், இந்திய ராணுவம், இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி) அதிகாரிகள் ஆகியோர் மேய்ச்சல் இடத்தைப் பார்வையிட்டிருக்கின்றனர். இது குறித்து ஊடகத்திடம் பேசிய நியோமா கவுன்சிலர் இஷே ஸ்பால்சாங், “இந்தப் பகுதி கால்நடைகளின் குளிர்கால மேய்ச்சலுக்கு அவசியமான ஒன்று.
இதற்கு முன் 2019-ல், சீனர்கள் நம் மேய்ச்சல்காரர்களைத் தடுக்க முயன்றனர். அதன் பின்னர், நாங்கள் எங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்த கூடாரங்களை அமைத்தோம். இந்த இடத்திலிருந்து 5 முதல் 7 கி.மீ தொலைவில்தான் ராணுவப் பிரிவு இருக்கிறது. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட நாளில் அவர்கள் அந்தப் பகுதிக்கு வரவில்லை.” என்றார்.
சமீபகாலமாக லடாக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.