சூதாட்டம் மற்றும் போதைப் பொருள் குற்றத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு லஞ்சம் கேட்டது மற்றும் 5,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற சந்தேகம் தொடர்பில் இரண்டு போலீஸ்காரர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளது.
அவ்விருவரையும் இம்மாதம் 11ஆம் தேதிவரை தடுத்து வைக்கும் உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். நேற்று நண்பகல் திரெங்கானு MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் வழங்க வந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் தங்களது வங்கிக் கணக்கின் மூலம் லஞ்சப் பணத்தை பெற்றுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதை திரெங்கானு MACC இயக்குநர் ஹஸ்ருல் சஸ்ரின் அப்துல்
யாஷிட் (Hazrul Shazreen Abdul Yazid) உறுதிப்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


