• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

லசந்த விக்ரமதுங்க படுகொலை;NPP அரசின் மீது நம்பிக்கை

GenevaTimes by GenevaTimes
January 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
லசந்த விக்ரமதுங்க படுகொலை;NPP அரசின் மீது நம்பிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



படுகொலை செய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பம், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர், லசந்த மரணித்து 16 வருடங்களுக்குள் நான்கு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு எவருக்கும் அரசியல் உள்நோக்கம் இல்லை எனவும் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் லசந்த விக்ரமதுங்கவின் மரணம் மட்டுமல்லாது மேலும் பல முக்கிய வழக்குகளையும் விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது.


“ஆரம்பத்தில், இது புலிகளால் செய்யப்பட்டது என்ற பெரிய ஊகத்துடன் இந்த வழக்கு TID இன் கீழ் இருந்தது. எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றுமாறு எமது சட்டத்தரணி கோரினார். பின்னர் அது ஷானி அபேசேகர ஒரு பகுதியாக இருந்த சமயத்தில் சிஐடிக்கு மாற்றப்பட்டது. 


“சிஐடி நடத்திய விசாரணையில், கொலையில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் அறியும் அளவிற்கு கூட, மரணம் தொடர்பான பல முக்கிய உண்மைகள் வெளிவந்தன,” என்று அவர் கூறினார்.


இந்த அரசாங்கத்தின் கீழ், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குத் திரும்பியுள்ள நிலையில், புதிய விசாரணைகள் தேவையில்லை எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதே எஞ்சியுள்ளதாகவும் லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் தெரிவித்துள்ளார். 


லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சகாக்கள் இந்த அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


மறைந்த இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 16வது நினைவு தினம் இன்று (ஜனவரி 08) அனுஸ்டிக்கப்பட்டது.



Read More

Previous Post

நர்சரியில் இருந்த நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு | Makkal Osai

Next Post

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் கைது

Next Post
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் கைது

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin